டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து.. பொதுமக்களுக்கு என்ன ஆச்சு?

திங்கள், 7 ஆகஸ்ட் 2023 (12:59 IST)
சற்றுமுன் போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து பொதுமக்கள் பத்திரமாக வெளியேற்றிக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன 
 
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள எண்டோஸ்கோப்பி அறையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த எட்டு தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
 
தீ விபத்து ஏற்பட்ட பகுதியிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக வெளியேறிக் கொண்டிருப்பதாகவும் தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீரென ஏற்பட்ட காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்