மியான்மர் நாட்டில் படகு கவிழ்ந்து விபத்து- 17 பேர் பலி

வியாழன், 10 ஆகஸ்ட் 2023 (21:00 IST)
மியான்மர் நாட்டின் ராக்கைன் மாநிலத்தில் இருந்து ரோஹிங்கியா அகதிகள் வெளியேறி வரும்  நிலையில், அவர்களை அழைத்துச் கொண்டு சென் படகு கடலில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.

மியான்மர் நாட்டில் ஆண்தோறும் ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா அகதிகள் வங்காள தேசம் மற்றும் மியான்மரில் உள்ள முகாம்களில் இருந்து தப்பிச் செல்கின்றனர்.

அப்படி அவர்கள் தப்பிச் செல்லும்போது, கடல் வழி பயணங்களை மேற்கொள்ளுவதால் இது ஆபத்தாகவும் முடிகிறது. அந்த வகையில், முகாம்களில் இருந்து தப்பித்து, இந்தோனேஷியா, மலேசியா போன்ற நாடுகளுக்கு அவர்கள் படகு மூலம் தப்பிக்கும்போது விபத்து  நேரிடுகிறது.

இந்த  நிலையில், மலேசியா நாட்டிற்கு சென்ற படகில் ரோஹிங்கியா அகதிகள் 50க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். இப்படகு விபத்தில் சிக்கியதில், இதுவரை 17 பேரில் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 8 பேரை உயிருடன் மீட்டுள்ளதாகவும் மீட்புப் படையினர் கூறியுள்ளனர்.

இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்