ஐசிஐசிஐ வங்கியில் மினிமம் பேலன்ஸ் இனி ரூ.50,000.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

Mahendran

சனி, 9 ஆகஸ்ட் 2025 (14:08 IST)
இந்தியாவின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான ஐசிஐசிஐ வங்கி, தனது புதிய வாடிக்கையாளர்களுக்கான குறைந்தபட்ச இருப்பு தொகையை அதிரடியாக உயர்த்தியுள்ளது. இந்த நடவடிக்கை, சாமானியர்களுக்கான வங்கி என்ற அதன் பிம்பத்தை மாற்றியமைக்கக்கூடும் என நிதி வட்டாரங்களில் பேசப்படுகிறது.
 
ஆகஸ்ட் 1 முதல், பெருநகரங்களில் புதிதாக சேமிப்பு கணக்கு தொடங்குபவர்கள், தங்கள் கணக்கில் மாதாந்திர சராசரி இருப்பாக ரூ.50,000 வைத்திருக்க வேண்டும். இது இதற்கு முன்பு ரூ.10,000 ஆக இருந்தது. அதேபோல், புறநகர் பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு இந்தத் தொகை ரூ.5,000-ல் இருந்து ரூ.25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் கணக்கு தொடங்கும் வாடிக்கையாளர்கள், இதற்கு முன்னர் ரூ.2,500 குறைந்தபட்ச இருப்பாக வைத்திருந்தால் போதும் என்ற நிலையில், தற்போது அந்தத் தொகை ரூ.10,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
 
இந்தியாவில் உள்ள மற்ற வங்கிகளுடன் ஒப்பிடும்போது, ஐசிஐசிஐ வங்கியின் இந்த புதிய குறைந்தபட்ச இருப்புத் தொகை அதிகம் என்று கூறப்படுகிறது. இந்த முடிவு, நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் பிரிவினருக்கு சிரமத்தை ஏற்படுத்தலாம் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. இது, வங்கியின் வாடிக்கையாளர் தளத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும், நிதி நிபுணர்கள் கருதுகின்றனர்.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்