மின்கம்பி அறுந்து விழுந்து விபத்து.. தாய்-மகன் சம்பவ இடத்திலேயே பலி..!

வெள்ளி, 11 ஆகஸ்ட் 2023 (09:15 IST)
மின்கம்பி அறுந்து விழுந்து தாய் மகன் உள்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியான சம்பவம் தர்மபுரி அருகே நடந்துள்ளது.  
 
தர்மபுரி அருகே காரிமங்கலம் என்ற பகுதியில் மின் கம்பத்தில் இருந்த மின் கம்பி திடீரென அறுந்து விழுந்து தரையில் விழுந்துள்ளது. மழை வேறு பெய்து கொண்டிருந்த நிலையில் இந்த பகுதி வழியாக சென்ற தாய் மகன் உள்பட மூன்று பேர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். 
 
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் மின் கம்பத்தில் உள்ள மின் கம்பிகளை முறையாக பராமரிக்க வேண்டும் என மின்வாரியத் துறையினருக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்  கோரிக்கை விடுத்து வருகின்றனர்,.
 
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தை அடுத்து அந்த பகுதியில் உள்ள அனைத்து மின்கம்பிகளும் பராமரிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்