புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

Webdunia
செவ்வாய், 31 டிசம்பர் 2019 (07:18 IST)
இன்று இரவு சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறுவதால் போக்குவரத்து சில இடங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது
 
இதன்படி சென்னை மெரினா காமராஜர் சாலையில் இன்று இரவு 8 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரை போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அடையாறில் இருந்து காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் இரவு 8 மணிக்கு பின்னர் சாந்தோம் கச்சேரி சாலை வழியாக சென்று ராயப்பேட்டை வழியாக அண்ணா சாலையை சென்றடை வேண்டும். அதேபோல் பாரிமுனையில் காமராஜர் சாலைக்கு வரும் வாகனங்கள் போர் நினைவுச் சின்னம், கொடிமரச் சாலை வழியாக அண்ணா சாலையை சென்றடை வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
சென்னை மெரினாவிற்கு புத்தாண்டு கொண்டாட வாகனங்களில் வருபவர்கள் ராணி மேரிக் கல்லூரி, சிவானந்த சாலை, சேப்பாக்கம் ரயில் நிலையம் அருகில், லாயிட்ஸ் சாலை, டாக்டர் பெசண்ட் சாலை ஆகிய இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பகுதிகளில் தங்கள் வாகனங்களை பார்க்கிங் செய்ய வேண்டும். மேலும் இரவு நேரத்தில் சென்னையில் உள்ள சுமார் 75 மேம்பாலங்கள் போக்குவரத்துக்கு தடை செய்யப்படும்
 
மேலும் அனுமதி பெற்ற கேளிக்கை விடுதிகள், நட்சத்திர விடுதிகள் நள்ளிரவு ஒரு மணிக்கு கண்டிப்பாக மூடிவிட வேண்டும். இல்லையேல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
 
இவ்வாறு சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா அவர்கள் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்