இன்னும் ஒரு வாரத்துக்கு மழை பெய்யுமாம்..

Arun Prasath

திங்கள், 30 டிசம்பர் 2019 (12:47 IST)
இன்னும் ஒரு வாரத்திற்கு தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் ஆங்காங்கே பல பகுதிகளில் மழை பெய்து வந்தது. நேற்று இரவு மற்றும் இன்று காலையில் சென்னையில் லேசான மழை பெய்தது.

இந்நிலையில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தின் சில இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்