10 ரூபாய்க்கு சென்னையையே சுற்றிப் பார்க்கலாம்..

Arun Prasath

திங்கள், 30 டிசம்பர் 2019 (13:59 IST)
ஆங்கில புத்தாண்டு அன்று 10 ரூபாய் கட்டணத்தில் சென்னையை சுற்றிப்பார்க்க தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகம் சிறப்பு பேருந்து ஏற்பாடு செய்துள்ளது.

ஆங்கில புத்தாண்டான ஜனவரி 1 ஆம் தேதி, 10 ரூபாய் கட்டணத்தில் சென்னையை சுற்றி பார்க்க தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகம் ஏற்பாடு செய்துள்ளது. அதன் படி, மெரினா கடற்கரை, பெசண்ட் நகர் சர்ச், குண்டி பூங்கா, விவேகானந்தர் இல்லம், கலங்கரை விளக்கம், அஷ்டலட்சுமி கோவில் உள்ளிட்ட பகுதிகளை பார்க்கலாம் எனவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அந்த பேருந்துகள் அனைத்தும் திருவல்லிக்கேணியிலுள்ள சுற்றுலா வளாகத்திலிருந்து இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த சுற்றுலா திட்டமிடப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்