’டிடிவி தினகரன் வழக்கு’ :டெல்லி பாட்டியாலயா நீதிமன்றம் தடை உத்தரவு

Webdunia
வெள்ளி, 8 மார்ச் 2019 (13:17 IST)
இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் அதிமுகவுக்கு வழங்கியதை எதிர்த்து டிடிவி தினகரன் தொடர்ந்த வழக்கில் சில நாட்களுக்கு முன் தீர்ப்பு அளித்த டெல்லி ஐகோர்ட், தேர்தல் ஆணையம் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை வழங்கியது சரியான நடவடிக்கையே என தீர்ப்பு அளித்து தினகரனின் மனுவை தள்ளுபடி செய்தது.
தேர்தல் ஆணையத்திடமிருந்து இரட்டைஇலை சின்னத்தைப் பெற  டிடிவி தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. 
 
இதனையடுத்து டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டு திகார் சிறையில்  வைக்கப்பட்டார்.ஆனால் சில தினங்களிலேயே ஜாமீனில் வெளியே வந்தார்.
 
மேலும் இது சம்பந்தமான வழக்கு தற்போது டெல்லி பாட்டியாலயா நீதிமன்றதில் நடைபெற்று வருகின்றன. அதேசமயம் டெல்லி காவல்துறையினர் தினகரன் உள்பட சிலபேர் மீது குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 
 
இந்நிலையில் இவ்வழக்கை விசாரிக்க தடைகோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் தரப்பினர் மனு தாக்கல் செய்யப்பட்டது. 
 
இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம் டிடிவி தினகரனுக்கு எதிரான வழக்கை விசாரிக்க வரும் மார்ச் 20 ஆம் தேதி வரை தடை விதித்து டெல்லி பாட்டியாலயா நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்