பாதுகாப்பற்ற உணவுப் பொருட்களில் தமிழகம் முதலிடம்! அதிர்ச்சி ரிப்போர்ட்!

புதன், 27 நவம்பர் 2019 (16:07 IST)
இந்தியாவில் விற்கப்படும் உணவு பொருட்களிலேயே தமிழகத்தில்தான் பாதுகாப்பற்ற உணவுப்பொருட்கள் விற்கபடுவதாக வெளியான அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் விற்பனையாகி வரும் உணவுப் பொருட்களின் தரத்தை மத்திய உணவு தரக்கட்டுபாட்டு வாரியம் ஆய்வு செய்துள்ளது. நாடு முழுவதும் சேகரிக்கப்பட்ட 1 லட்சத்துக்கும் அதிகமான உணவுப்பொருட்களை ஆய்வு செய்ததில் அதில் 3.7 சதவீதம் உணவுகள் பாதுகாப்பு அற்றவையாகவும், 15 சதவீத உணவுகள் தரம் குறைவானதாகவும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பாதுகாப்பற்ற உணவுகல் அதிகம் விற்கப்படும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக அந்த ஆய்வு தெரிவித்துள்ளது. மேலும் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி குறித்து ஒட்டப்படும் லேபிள்களில் தமிழகத்தில்தான் அதிகம் குளறுபடிகள் நடைபெறுவதாகவும் அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்