பயணிகளிடம் தகாத வார்த்தையில் பேசிய ஓட்டுனர் மற்றும் நடத்துனரின் உரிமம் ரத்து

Webdunia
வெள்ளி, 1 டிசம்பர் 2023 (19:14 IST)
கடலூரில் பயணிகளிடம் தகாத வார்த்தையில் பேசிய ஓட்டுனர் மற்றும் நடத்துனரின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
 

கடலூர் மாவட்ட பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று மாலை விருத்தாச்சலத்திற்கு புறப்பட்ட தயார் நிலையில் இருந்தது. அப்போது, குறிஞ்சிப்பாடி செல்ல ஏறிய பயணிகளிடம் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் தகாத வார்த்தையில் பேசியுள்ளனர்.

இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த விவகாரம் குறிஞ்சிப்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், வேளாண்துறை அமைச்சருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் கவனத்திற்குச் சென்றது.

இதுபற்றி விசாரிக்க அவர் உத்தரவிட்டார். இதையடுத்து,  வட்டார போக்குவரத்து அதிகாரி அருணாச்சலம் பயணிகளிடன் நடத்திய விசாரணையில் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பயணிகளை தகாத வார்த்தையில் பேசியது உறுதியானது. எனவே இருவரின் ஓட்டுனர்  மற்றும் நடத்துனரின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்