11-ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு ரத்து குறித்து டாக்டர் ராமதாஸ் கருத்து

புதன், 9 ஜூன் 2021 (22:21 IST)
11-ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு ரத்து குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறிய கருத்து பின்வருமாறு:
 
தமிழ்நாட்டில் 11-ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பது சரியான நடவடிக்கை.  பா.ம.க. சுட்டிக்காட்டிய தவறை தமிழக அரசு சரி செய்திருக்கிறது.  மாணவர் நலன் சம்பந்தப்பட்ட  விஷயங்களில் அவசரப்படாமல் நிதானமாக முடிவெடுக்க வேண்டும்
 
9-ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் 11-ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒன்பதாம் வகுப்புக்கு ஆண்டு இறுதித் தேர்வு நடத்தப்படாத நிலையில் இதுவும் குழப்பத்தை ஏற்படுத்தும்!(
 
2019-2020 கல்வியாண்டில்  9-ஆம் வகுப்பில் நடத்தப்பட்ட எந்தெந்த தேர்வுகளின் மதிப்பெண்கள் மாணவர் சேர்க்கைக்கு கணக்கில் கொள்ளப்படும் என்பது குறித்து தெளிவான அறிவிப்பை பள்ளிக்கல்வி ஆணையரகம் வெளியிட வேண்டும்
 
உயர்நிலைப்பள்ளிகளில் படித்து மேல்நிலைப்பள்ளிகளில் 11-ஆம் வகுப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களிடம் அதிகாரப்பூர்வ மதிப்பெண் பட்டியல் இருக்காது.  அவர்களுக்கு அதிகாரப்பூர்வ மதிப்பெண் பட்டியல்  வழங்க அரசு ஆணையிட வேண்டும்!
 
இவை அனைத்தையும் முடித்து ஜூன் மூன்றாவது வாரத்திற்குள் வகுப்புகளை தொடங்குவது சாத்தியமில்லை என்பதால் 11-ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசத்தை சில வாரங்களுக்கு தமிழக அரசு நீட்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
 
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்