கொரோனா வைரஸுக்கு மருந்து என்றால் நம்ப வேண்டாம் ...பீலா ராஜேஷ்

Webdunia
புதன், 5 பிப்ரவரி 2020 (20:47 IST)
கொரோனோ வைரஸ்
கொரோனோ வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என யாராலும் கூறினால் அதை நம்ப வேண்டாம் என சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
 
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் 492 பேர் பலியாகியுள்ள நிலையில் வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் சீனா திணறி வருகிறது.
 
சீனாவின் வூகான் மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனா வைரஸால் இதுவரை 492 பேர் இறந்துள்ளனர். சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு இந்த வைரஸ் பரவியுள்ளது. சீனாவை தாண்டி ஹாங்காங் மற்றும் பிலிப்பைன்ஸில் இருவர் கொரோனா வைரஸால் இறந்துள்ளனர்.
 
வைரஸ் பாதிப்பால் அனுமதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் 9 நாட்களில் 1000 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனையை கட்டி முடித்துள்ளது சீனா. மேலும் இரண்டு தற்காலிக மருத்துவமனை கட்ட சீன அரசு திட்டமிட்டு வருகிறது.
 
எத்தனை மருத்துவமனைகள் கட்டினாலும் வைரஸ் முறிவு மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் வைரஸை கட்டுப்படுத்த முடியாது என மருத்துவ ஆய்வாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். பல்வேறு நாடுகளும் கொரோனா வைரஸ் முறிவு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளன.
 
இந்நிலையில் கொரொனோ வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து  தேனாம்பேட்டை கூட்ட அரங்கில், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் பீலா ராஜேஷ் ஆய்வுக்கூட்டம் நடத்தினார். 
 
அப்போது அவர் கூறியதாவது, கொரோனா சிறப்பு வார்டுகளில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில், 12 பேர் வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.  7 பேருக்கு  தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு  கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்