சென்னையில் மீண்டும் ஒரு சம்பவம்.. வளர்ப்பு நாய் கடித்ததில் சிறுவன் படுகாயம்..!

Mahendran
புதன், 8 மே 2024 (13:54 IST)
சென்னையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை நாய்கள் கடித்து குதறிய சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது மீண்டும் ஒரு சிறுவனை நாய் கடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சென்னை வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுவன் போலீஸ் குடியிருப்பில் தனது உள்ள தனது அத்தை வீட்டிற்கு கோடை விடுமுறையை கழிக்க வந்துள்ளார். அப்போது அந்த பகுதியில் வளர்ந்து வரும் நாய் திடீரென சிறுவனை கடித்ததாகவும் இதனால் சிறுவனுக்கு கையில் காயம் ஏற்பட்டதாகவும் தெரிகிறது
 
 இதனை அடுத்து உடனடியாக சிறுவனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறுவனின் பெற்றோர் பரங்கிமலை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் நாய் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் 
 
இரண்டு நாட்களுக்கு முன்பு நுங்கம்பாக்கத்தில் உள்ள பூங்காவில் சிறுமியை நாய் கடித்துக் குதறிய நிலையில் தற்போது மீண்டும் ஒரு சிறுவனை நாய் கடித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்