சிக்கன் ரைஸ் வாங்கி சாப்பிட்ட 2 பேர் மருத்துவமனையில் அனுமதி.. மாவட்ட ஆட்சியர் ஆய்வு..

Mahendran

புதன், 1 மே 2024 (16:25 IST)
நாமக்கல் மாவட்டத்தில் இரண்டு நபர்கள் ஹோட்டலில் சிக்கன் ரைஸ் வாங்கி சாப்பிட்ட நிலையில் சில நிமிடங்களில் அவர்கள் உடல் நல பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இது குறித்து மாவட்ட ஆட்சியர் உமா அவர்கள் ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சிக்கன் ரைஸ் பார்சல் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்ற இரண்டு நபர்கள் அந்த சிக்கன் ரைஸ் சாப்பிட்ட ஒரு சில நிமிடங்களில் திடீரென உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவரின் பரிசோதனையில் அவர்கள் சாப்பிட்ட சிக்கன் ரைஸ் தான் அவர்களது உடல் நலத்திற்கு காரணம் என்று கூறப்படுவதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்தவுடன் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா அவர்கள் உடனடியாக ஆய்வு செய்ய சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு சென்றார். அவருடன் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சென்ற நிலையில் ஹோட்டலுக்கு சீல் வைக்கப்பட்டதாகவும் ஹோட்டல் உரிமையாளரிடம் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 தற்போது சிக்கன் ரைஸ் சாப்பிட்டு உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இருவரது உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்படுகிறது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்