ஜெ. மரணம் தொடர்பான விசாரணையில் மாறி மாறி பேசும் டாக்டர் பாலாஜி

Webdunia
வியாழன், 15 பிப்ரவரி 2018 (17:48 IST)
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கான அங்கீகாரப் படிவத்தில் ஜெயலலிதாவின் கைரேகை பெறப்பட்ட விவகாரம் தொடர்ந்து சர்ச்சையாக உள்ளது. 

 
ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் முன்பு நேற்று மூன்றாவது முறையாக ஆஜரான டார்கர் பாலாஜி, ஜெயலலிதாவின் கைரேகையை பெற யாரும் எழுத்துப்பூர்வ ஆவணம் கொடுக்கவில்லை என்று கூறினார்.
 
இதுகுறித்து சுகாதரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அளித்த பதிலில், ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளிப்பதிற்கு மட்டும்தான் எழுத்துப்பூர்வமான கடிதங்கள் அனுப்பப்பட்டன. கைரேகை பெற்றதை பொறுத்தவரையில் ஒரு உத்தரவும் எழுத்துப்பூர்வமாகவோ, வாய்மொழியாகவோ டாக்டர் பாலாஜி அல்லது மற்ற யாரும் கோரவில்லை. கைரேகை எடுக்கும் போது அரசு டாக்டர்கள் இருக்க வேண்டும் என்ற உத்தரவு இருந்ததே தவிர, அதற்கு தனிப்பட்ட உத்தரவு தேவைப்படவில்லை என்று கூறினார். 
 
இந்நிலையில் இன்று டாக்டர் பாலாஜி நீதிபதி ஆறுமுகசாமி விசாரணையில் கூறியதாவது, சுகாதாரத்துறை செயலாளர் கூறியதின் பேரில் நான் ஜெயலலிதாவிடம் கைரேகை பெறவில்லை. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி என் அதிகாரத்துக்கு உட்பட்டே ஜெயலலிதாவின் கைரேகையை பெற்றேன் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்