’’சௌகிதார் ’’பெயருக்கு முன்னால் பின்னால் போதுமா ..? கொரோனா பயமா!? ? சீமான் கேள்வி

Webdunia
புதன், 27 மே 2020 (22:26 IST)
கடந்த வரும் மக்களவைத் தேர்தலுக்கு முன் பிரதமர் முதற்கொண்டு பாஜக தலைவர்கள் தலைவர்கள் வரை அனைவரும் தங்கள் பெயருக்குப் பின் சௌகிதார் என்று அழைத்துக் கொண்டனர்.

இந்நிலையில், லடாக் பகுதியில் சீன படைகள் குவிப்பு  என சிலநாட்களாக செய்திகள் வரும் நிலையில் இதுகுறித்து நாம் தமிழர் என்ற கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தின் அவர் கூறியுள்ளதாவது;

லடாக் எல்லையில் சீன படைகள் குவிப்பு என்று செய்திகள் வருகிறது. பெயருக்கு பின்னாலும் முன்னாலும் சௌகிதார் என சேர்த்துக்கொண்ட பிரதமர், உள்துறை அமைச்சர், இராணுவ அமைச்சர், வெளியுறவுத் துறை அமைச்சர் என யாரும் இது குறித்து இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லையே..! ஏன்?  கொரோனா பயமா!?

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்