தொழிலாளர்களின் மாதச் சம்பளத்தில் பிடித்தம் செய்யக் கூடாது – அமைச்சர் எஸ்.பி வேலுமணி

Webdunia
செவ்வாய், 7 ஏப்ரல் 2020 (17:14 IST)
தனியார் நிறுவனங்கள் ஊழியர்களின் மாதச் சம்பளத்தில்  பிடித்தம் செய்யக் கூடாது என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி செய்தியாளர்களிடன் சந்தித்தார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது :

கடைகளில் அதிக விலைக்கி பொருட்களை விற்கக்கூடாது.  கொரோனா தொற்றை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

15 அம்மா உணவகங்களில் 20 ஆயிரம் பேர் பயனடைந்து வருகின்றனர். மேலும், தனியார் மருத்துவமனைகள்  பொதுமக்களுக்கு தடையில்லாமல் அனைத்து வகையான சிகிச்சைகளையும் மக்களுக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்வதை தவிர்க்க வேண்டும். அவர்களின் மாதச் சம்பளத்தில் பிடித்தம் செய்ய கூடாது என அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்