ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறிய புயல் சின்னம்.. கரையை கடப்பது எப்போது?

Mahendran

திங்கள், 18 ஆகஸ்ட் 2025 (10:01 IST)
வங்கக்கடலில் உருவான புயல் சின்னம் தற்போது வலுப்பெற்று, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு வங்கக்கடலில் ஆகஸ்ட் 17-ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவான நிலையில், இது தற்போது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.
 
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு திசைகளில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த புயல் சின்னம் நாளை (ஆகஸ்ட் 19) கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த புயல் சின்னம் வலுப்பெற்று கரையை நோக்கி நகர்வதால், அதன் தாக்கத்தால் கடலோர மாநிலங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மீனவர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கப்பட்டுள்ளதுடன், மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்