சூரியனை விட்டு விலகும் பூமி! இன்று முதல் நமது உடலில் ஏற்படப்போகும் மாற்றம் என்ன?

Prasanth K

திங்கள், 18 ஆகஸ்ட் 2025 (10:05 IST)

சூரியன் - பூமி இடையே நிகழும் அபெலியன் நிகழ்வினால் உடலில் சில ஒவ்வாமைகள் மாற்றங்கள் ஏற்படலாம் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

 

விண்வெளியில் பூமி, சூரியனை நீள் வட்டப்பாதையில் சுற்றி வரும் நிலையில் ஆண்டுதோறும் ஆகஸ்டு மாத வாக்கில் சூரியன் - பூமி இடையேயான சுற்றுப்பாதையின் நீளம் அதிகரிக்கிறது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயான தொலைவு சராசரியாக 147 மில்லியன் கிலோ மீட்டர்கள். இது அபெலியன் நிகழ்வின்போது 152 மில்லியன் கிலோ மீட்டராக நீள்கிறது.

 

இவ்வாறாக சூரியனிடமிருந்து மிக தொலைவுக்கு பூமி நகரும்போது பூமியில் வெப்பநிலை குறைந்து குளிர் அதிகரிக்கிறது. விஞ்ஞானிகள் கணிப்பின்படி, இன்று காலை 5.27 மணிக்கு அபெலியன் நிகழ்வு தொடங்கி ஆகஸ்டு 22ம் தேதி முடிவடைகிறது. 

 

இந்த குறிப்பிட்ட காலக்கட்டத்தில் கடந்த ஆண்டை விட கூடுதலாக குளிரை உணர முடியும் என்றும், பலருக்கு சளி, காய்ச்சல் ஏற்படலாம் என்றும் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் தொண்டையில் வலி, இருமல், சுவாச கோளாறு ஏற்படலாம். ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது என அறிவுறுத்தப்படுகிறது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்