கலைஞர் நினைவு தினத்தை முன்னிட்டு திமுகவினர் அமைதிப் பேரணி...

Webdunia
செவ்வாய், 1 ஆகஸ்ட் 2023 (14:26 IST)
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் 7 ஆம் தேதி சென்னையில் அமைதிப் பேரணி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் கடந்த 199, 1971, 1989, 1999, 2006 ஆகிய ஆண்டுகளில் முதல்வராகப் பதவி வகித்தவர் கலைஞர் மு. கருணாநிதி. இவர், கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி உடல் நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, சிகிச்சை பலனின்றி காலமானார்.

இவரது நினைவு தினம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. தற்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வரும் நிலையில், கருணா நிதியின் 5 வது நினைவு தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் ஆகஸ்ட்  7 ஆம் தேதி காலை 8 மணிக்கு ஓமந்தூரில் உள்ள கலைஞரின் சிலையில் இருந்து  நினைவிடம் வரை அமைதிப் பேரணி நடக்கவுள்ளது.

இதில், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், நிவாகிகள், தொண்டர்கள் பங்கேற்க கட்சித்தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்