சொந்தக்கார பெண்களுக்கு சீட்டு..? திமுக மகளிரணி கோபம்! – செந்தில்பாலாஜி வீடு முற்றுகை!

வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (11:19 IST)
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தலில் உறவினர் முறை பெண்களுக்கு போட்டியிட வாய்ப்பளித்ததாக கூறி அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டை திமுக மகளிரணி முற்றுகையிட்டுள்ளனர்.

தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி தேர்தல் ஜனவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்யும் தேதி இன்றுடன் முடிவடையும் நிலையில் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல், பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை பகுதியில் திமுக சார்பில் போட்டியிட மகளிருக்கு 50 சதவீதம் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த இடங்களில் திமுக நிர்வாகிகளின் மகள், மனைவி ஆகியோர் போட்டியிடுவதாக மகளிர் அணியினர் குற்றம் சாட்டியுள்ளனர். பல ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்து வரும் மகளின் அணியினருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்காததை கண்டித்து நேற்று அவர்கள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டை முற்றுகையிட்டுள்ளனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் இல்லாத நிலையில் அங்கு விரைந்த போலீஸார் மகளிர் அணியினரிடம் பேசி சமாதானம் செய்து அனுப்பிவைத்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்