தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்க முடிவு செய்துள்ளதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன் “கும்பகோணத்தில் டிசம்பர் மாதம் மஹல்லா ஜமாத் நிர்வாகிகளை ஒருங்கிணைத்து மாநாடு நடைபெற உள்ளது. திமுகவுடனான கூட்டணி என்பது கொள்கை ரீதியிலானது. திமுகவை தவிர்த்து வேறு கட்சிகளுடன் கூட்டணி என்று சிந்தித்ததே கிடையாது.
வருகிற சட்டமன்ற தேர்தலில் திருச்சி, சென்னை, நெல்லை, வேலூர், கடலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து 6 தொகுதிகளை கேட்க உள்ளோம். அதில் 5 தொகுதிகளையாவது ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைப்போம். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் மும்முனை போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்” என தெரிவித்துள்ளார்.
Edit by Prasanth.K