2026 தேர்தலில் விஜய் வெற்றி பெறுவாரா? வைகோவின் கணிப்பு..!

Siva

வெள்ளி, 24 அக்டோபர் 2025 (19:06 IST)
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, நடிகர் விஜய் நடத்திய கரூர் கூட்டத்தில் 41 பேர் பலியான துயர சம்பவம் குறித்துக் கருத்து தெரிவித்தார்.
 
“கூட்ட நெரிசல் குறித்து விஜய்க்கு முன்னரே தெரிவிக்கப்பட்டிருக்கலாம். விபத்து நடந்த பதட்டத்தில் சென்னைக்கு சென்ற அவர், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்திருக்கலாம்,” என்று வைகோ விமர்சித்தார். அதிகக் கூட்டம் கூடும் இடங்களில் பாதுகாப்பு அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
 
2026 சட்டமன்றத் தேர்தலில், திமுக தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் ஐயமில்லை என்று வைகோ உறுதியாகக் கூறினார். கரூர் சம்பவம் திமுக கூட்டணிக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும், புதிதாக களமிறங்கும் விஜய் பெருமளவு வெற்றி பெறுவார் என்ற வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்