தேர்தலில் வாக்குகள் குறைந்தால் அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை பாயும்: திமுக எச்சரிக்கை

Mahendran
வியாழன், 25 ஜனவரி 2024 (12:41 IST)
நாடாளுமன்ற தேர்தலில் வாக்குகள் குறைந்தால் பொறுப்பு அமைச்சர்கள் தொடங்கி ஒன்றிய செயலாளர் வரை அனைவர் மீதும் நடவடிக்கை பாயும் என கட்சி நிர்வாகிகளுக்கு திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
கிருஷ்ணகிரி, திருவள்ளூர் மாவட்டங்களைச் சார்ந்த நிர்வாகிகளுடன் ஒருங்கிணைப்பு குழு இன்று நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனை கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் வாக்குகள் குறைந்தால் பொறுப்பு அமைச்சர்கள் தொடங்கி ஒன்றிய செயலாளர் வரை அனைவர் மீதும் நடவடிக்கை பாயும் எனவும், தேர்தலில் சரியாக பணிபுரியாதவர்களின் பெயர்கள் திமுக தலைவரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

ALSO READ: கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம்: கேஎஸ் அழகிரி அதிரடி அறிவிப்பு..!
 
மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கள நிலவரம், வாய்ப்புள்ள வேட்பாளர்கள், தொகுதியில் கூட்டணி கட்சிகளின் பலம் குறித்து குழுவினர் கேட்டறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
 
 வரும் நாடாளுமன்ற தேர்தல் என்பது திமுகவுக்கு ஒரு முக்கிய விஷயமாக கருதப்படுகிறது. ஒரு பக்கம் அண்ணாமலை தமிழகத்தில் பாஜகவை வளர்த்துக் கொண்டிருக்கும் நிலையில் திமுகவின் வாக்குகள் குறையவில்லை என்பதை நிரூபிக்கும் தேர்தலாகவே வரும் நாடாளுமன்ற தேர்தல் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்