இந்தியா கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகுகிறதா? தமிழகத்தில் என்ன நடக்கும்?

Siva

வியாழன், 25 ஜனவரி 2024 (07:48 IST)
இந்தியா கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேற வாய்ப்பு இருப்பதாகவும் இதனை அடுத்து தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.  

இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் உட்பட 26 கட்சிகள் இருக்கும் நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சிக்கு மற்ற கட்சிகள் ஒத்துழைப்பு தர மறுத்து வருகிறது. குறிப்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். அதேபோல் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாப் மற்றும் டெல்லியில் தனித்து போட்டி என்று அறிவித்துள்ளார்.

 காங்கிரசை ஒரு கட்சியாகவே இந்த இரு முதல்வர்களும் மதிக்கவில்லை. அதேபோல் மற்ற சில மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக இந்தியா கூட்டணி கட்சிகள் போர்க்கொடி தூக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை அடுத்து இந்தியா கூட்டணியில் இருந்து  காங்கிரஸ் கட்சி விலகி தனி அணியாக போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு போட்டியிட்டால் தமிழகத்திலும் சில மாற்றங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு குறைவான தொகுதிகள் ஒதுக்கப்பட்டால் காங்கிரஸ் தலைமையில் ஒரு தனி அணிய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அந்த கூட்டணியில் திமுக மீது அதிருப்தியில் உள்ள கட்சிகள் இணையும் என்றும் கூறப்படுகிறது

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்