காங்கிரஸ் டெபாசிட் இழக்கக் காரணம் திமுகதான்: டிடிவி தினகரன்

Webdunia
வெள்ளி, 21 டிசம்பர் 2018 (17:31 IST)
சமீபத்தில் நடைபெற்ற கருணாநிதி சிலை திறப்பு விழாவில் 'ராகுல்காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். இது அகில இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஐந்து மாநில தேர்தலுக்கு பின் எதிர்க்கட்சிகள் காங்கிரஸ் தலைமையில் ஒன்று சேரும் நேரத்தில் ஸ்டாலினின் இந்த அறிவிப்பால் மீண்டும் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டு 3வது அணி உருவாகும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இதுகுறித்து அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியபோது, 'பாஜகவுக்கு உதவி செய்யும் நோக்கில்தான் ராகுல்காந்தியை ஸ்டாலின் முன்மொழிந்தாரோ என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. கடந்த தேர்தலில் காங்கிரஸ் டெபாசிட் இழக்கக் காரணம் திமுகதான். அதேபோன்று இந்த தேர்தலிலும் காங்கிரஸை தனிமைப்படுத்த ஸ்டாலின் இவ்வாறு குழப்பத்தை ஏற்படுத்துகிறார்.

தமிழக நலனை பாதுகாக்க, இங்குள்ள மாநிலகட்சிகள் வலுவானால்தான் முடியும். ஒருசில மாநிலக் கட்சிகளோடு பேசிக் கொண்டிருக்கிறேன். விரைவில் கூட்டணி அமைப்பேன்' என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். திமுக-காங்கிரஸ் கூட்டணியில் இடம் கிடைக்காதவர்கள் தினகரன் தலைமையில் புதிய கூட்டணி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்