மகன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவியுடன் தூக்கில் தொங்கிய திமுக பிரமுகர்!

Webdunia
செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (18:37 IST)
மகன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவியுடன் தூக்கில் தொங்கிய திமுக பிரமுகர்!
தங்களது ஒரே மகன் இறந்த துக்கம் தாங்காமல் திமுக பிரமுகர் ஒருவர் மனைவியுடன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
 மேக்கவிளை என்ற பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் சகாயம். இவருடைய ஒரே மகன் திடீரென சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இந்த சம்பவத்திற்கு பிறகு சகாயம் மற்றும் அவருடைய மனைவி பெரும் சோகத்தில் இருந்த நிலையில் திடீரென ஒரே மகன் இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் கடிதம் எழுதி வைத்து விட்டு மனைவியுடன் தூக்கில் தொங்கினார் 
 
இரண்டு நாட்களாக அவர்களது வீடு பூட்டி இந்த நிலையில் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கதவு திறந்து பார்த்தபோது தம்பதியினர் உடல் அழுகிய நிலையில் தூக்கில் தொங்கியபடி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது
 
இதனையடுத்து காவல்துறையினர் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர் 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்