அண்ணாமலையே திமுக ஆட்சி வலுவாக உள்ளதாக பேசியுள்ளார்: அமைச்சர் சேகர்பாபு

Siva

செவ்வாய், 9 செப்டம்பர் 2025 (11:26 IST)
தமிழகத்தில் திமுக ஆட்சி மக்கள் மன்றத்தில் வலுவாக உள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலையே மறைமுகமாக ஒப்பு கொண்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில், எந்தவொரு கட்சியாவது தேர்தலில் தாங்கள் தோற்போம் என சொல்லுமா என கேள்வி எழுப்பினார்.
 
திமுக ஆட்சி வலுவாக உள்ளது என அண்ணாமலையே கூறியுள்ளார்” என அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ளார். இது, 2026 தேர்தலில் அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெல்லும் என்ற எடப்பாடி பழனிசாமியின் பேச்சு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அளித்த பதிலாகும்.
 
மேலும் அதிமுகவின் தற்போதைய நிலை கோமா நிலையில் உள்ளது என்றும் அமைச்சர் சேகர்பாபு இன்னொரு கேள்விக்கு பதிலளித்தார்.
 
அமைச்சர் சேகர்பாபுவின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலையின் பேச்சை தங்களுக்கு சாதகமாக திமுக பயன்படுத்தி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்