7 மாதத்தில் ஆயிரம் கோடி சைபர் மோசடி! எல்லாம் பொதுமக்கள் பணம்! - அதிர்ச்சி ரிப்போர்ட்!

Prasanth K

செவ்வாய், 9 செப்டம்பர் 2025 (11:25 IST)

இந்தியாவில் சைபர் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த 7 மாதங்களில் ஆயிரம் கோடிக்கு மேல் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

மக்கள் கஷ்டப்பட்டு வெளிநாடுகளில் வேலை பார்த்து, பல்வேறு விதங்களில் சம்பாதிக்கும் பணத்தை சைபர் மோசடி கும்பல்கள் நொடிகளில் திருடிவிடும் சம்பவங்கள் வாடிக்கையாகி வருகிறது. ஓடிபி எண் கேட்பது, டிஜிட்டல் அரெஸ்ட், கார்டு மேல 13 நம்பர் என விதவிதமான முறைகளில் வங்கி பணத்தை பொதுமக்களிடம் திருட மோசடி கும்பல்கள் அமைப்பாகவே செயல்பட்டு வருகிறது.

 

இதுகுறித்து மத்திய அரசு, ரிசர்வ் வங்கி பல்வேறு விழிப்புணர்வு விளம்பரங்களை மேற்கொண்டு வருகிறது. எனினும் மோசடி அளவு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. சைபர் க்ரைம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த ஆண்டு ஜனவரி - ஜூலை மாதத்திற்கு சைபர் மோசடி மூலமாக திருடுப்போன பொதுமக்களின் பணம் ரூ.1,010 கோடி. மோசடி தொடர்பாக 88,479 புகார்கள் பெறப்பட்டுள்ளது, சைபர் மோசடி தொடர்பாக ரூ.314 கோடி பணம் முடக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.62 கோடி மட்டுமே புகார் அளித்தவர்களுக்கு திரும்ப அளிக்கப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்