ஒரு வழக்கின் விசாரணையில், காஞ்சிபுரம் டிஎஸ்பி சட்டத்திற்கு முரணாக நடந்து கொண்டதாக கூறப்பட்டது. இதைப் பரிசீலித்த நீதிபதி, அவரை கைது செய்ய உத்தரவிட்டார். இதற்கு எதிராக காவல்துறை, உயர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது.
காவல்துறையின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், இந்த உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி என். சதிஷ்குமார், "இந்த விவகாரத்தில் ஏதோ ஒன்று வழக்கத்துக்கு மாறாக நடந்துள்ளது. சிறை தண்டனை நிறுத்தி வைக்கக்கோரி தாக்கல் செய்யப்படும் மனுக்கள் இன்று பிற்பகலுக்கு பின் விசாரிக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.