ஸ்டெர்லைட் விவகாரம் - தி.மு.க வின் ஒத்திவைப்பு தீர்மானம் நிராகரிப்பு

Webdunia
செவ்வாய், 29 மே 2018 (12:00 IST)
சட்டசபை கூட்டத் தொடரில் ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக திமுகவின் ஒத்திவைப்பு தீர்மானத்தை சட்டசபை சபாநாயகர் தனபால் நிராகரித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை தொடங்கியது தமிழக சட்டசபை வரும் ஜூலை 9ம் தேதி வரை 23 நாட்கள் நடைபெறவுள்ளது.  காலை 10 மணிக்கு அவை கூடியதும், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செ.மாதவன், கே.கே.ஜி.முத்தையா, சா.கணேசன், பி.அப்பாவு, ஆர்.சாமி, ஜெ.குரு என்கிற குருநாதன், பூபதி மாரியப்பன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
 
இதனையடுத்து  தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக பேரவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர திமுக சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.  ஸ்டெர்லைட் விவகாரம், துப்பாக்கிச்சூடு ஆகியவற்றை பற்றி நாள் முழுவதும் விவாதிக்க சட்டப்பேரவை விதி 56-ன் கீழ் ஒத்திவைப்பு தீர்மானம் கோரி  ஸ்டாலின் நோட்டீஸ் கொடுத்தார்.
ஆனால் திமுகவின் ஒத்திவைப்பு தீர்மானத்தை சபாநாயகர் நிராகரித்துவிட்டார். எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள், சட்டசபையை முடக்க முயற்சிக்க வாய்ப்புண்டு என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 1,000க்கும் மேற்பட்ட போலீசார் சட்டசபை வளாகத்தில் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்