இருப்பினும், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட வேண்டும் என்று தூத்துக்குடி மக்கள், அரசியல் தலைவர்கள் உள்பட பலரும் கோரிக்கைகள் வைத்தனர். இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் என நேற்று தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது. இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஸ்டர்லைட் ஆலைக்கு சீல் வைத்தார்.