தமிழகத்தில் திமுக ஆட்சி…மு.க. ஸ்டாலினுக்கு குவியும் வாழ்த்துகள்

Webdunia
ஞாயிறு, 2 மே 2021 (15:56 IST)
கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் திமுக இடையே பலத்த போட்டிகள் காணப்பட்டது.

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி திமுக தனிப்பெரும்பானைமைக்கும் அதிகமாக சுமர் 152 தொகுதிகளிலும், அதிமுக 78 இடத்திலும் முன்னைலையில் உள்ளது. இதனால் திமுகவின் வெற்றி உறுதியாகியுள்ளது.

இதனால் திமுகவினர் சென்னை அறிவாலயத்தில் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.

தற்போது ஸ்டாலின் போட்டியுள்ள கொள்ளத்தூரி தொகுதியில் அவர் 17,275 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளதால் வெற்றி உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் திமுக வெற்றி தனிப்பெரும்பான்மையுடன் உறுதியாகியுள்ளதால் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலினுக்கு ,நாட்டின் உள்ளா முக்கிய தலைவர்கள் வாழத்துகள் கூறி வருகின்றனர்.  

அதன்படி,டில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் , தமிழகத்தில் உள்ள திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். அடுத்த 5 ஆண்டுகளுக்கு உங்கள் தலைமையிடம் இருந்து நிறைய நன்மைக எதிர்பார்க்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.

உத்தரபிதேச முன்னாள் முதல்வர், அகிலேஷ் யாதவ், சிறப்பான வெற்றியை ஸ்டாலின் பெற்றுள்ளதாகப் பாராட்டியுள்ளார்.

பீகார் மாநில ராஷ்டிரிய ஜனத தள் தலைவர் தேஜஸ்வி முக ஸ்டாலினுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்