பின்னடைவில் இருக்கும் தமிழக பிரபலங்கள் யார் யார்?

ஞாயிறு, 2 மே 2021 (11:21 IST)
இந்த தேர்தலில் பல பிரபலங்கள் போட்டியிட்ட நிலையில் அந்த பிரபலங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவார்கள் என கருத்துக் கணிப்புகள் கூறின. ஆனால் கருத்துக் கணிப்பில் வெற்றி பெறுவார்கள் என்று கூறிய பல பிரபலங்கள் தற்போது பின்னடைவில் உள்ள தகவல் வெளிவந்துள்ளது. தமிழக தேர்தலில் பிரபலங்கள் பின்னணியில் உள்ள பிரபலங்கள் குறித்து தற்போது பார்ப்போம்
 
கோவில்பட்டி தொகுதியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பின்னடைவில் உள்ளார். அவரைவிட கடம்பூர் ராஜூ 2,513 ஓட்டு முன்னிலையில் உள்ளார்.
 
சைதாப்பேட்டை தொகுதியில் முன்னாள் மேயர் சைதை துரைசாமி பின்னடைவில் உள்ளார். இந்த தொகுதியில் திமுகவின் மா.சுப்பிரமணியன் முன்னிலை வகிக்கிறார்
 
அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிட்ட வைகை செல்வன் பின்னடைவு. இந்த தொகுதியில் திமுக வேட்பாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் முன்னிலையில் உள்ளார். 
 
ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பின் தங்கி உள்ளார். இந்த தொகுதியில் திமுக வேட்பாளர் தங்கபாண்டியனை விட சுமார் ஆயிரம் வாக்குகள் பின் தங்கியுள்ளார்.
 
ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் குஷ்பு பின்னடைவில் உள்ளார். அவர் திமுக வேட்பாளர் மருத்துவர் எழிலனைவிட சுமார் 9371 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவில் உள்ளார்.
 
குறிப்பாக காரைக்குடி தொகுதியில் ஹெச் ராஜா மற்றும் திமுகவின் முக்கிய வேட்பாளரான துரைமுருகன் காட்பாடி தொகுதியில் பின்னடைவில் உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்