உழைத்தவர்களுக்கு சீட் கிடைப்பதில்லை- திமுக மூத்த தலைவர் ஆதங்கம்!

சனி, 3 டிசம்பர் 2022 (20:45 IST)
உழைத்தவர்களுக்கு சீட் கிடைக்காமல், உழைக்காதவரக்ளுக்கு சீட் கிடைத்துள்ளதாக திமுகவின் மூத்த தலைவர் ஆர்.எஸ். பாரதி விமர்சித்துள்ளார்..

முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா திமுகவை தொடங்கினார். ஐம்பெரும் தலைவர்கள் அக்கட்சியில் இருந்தபோதிலும், கலைஞர் கருணா நிதி தன் திறமையால் அக்கட்சியின் தலைவரானார். அவரை ஆரம்பத்தில், பேராசிரியர் அன்பழகன் விமர்சித்தாலும், அவரை தலைவராக ஏற்று, திமுக பொதுச்செயலாளராக இருந்தார்.

கலைஞர் மறைவுக்குப் பின் முக ஸ்டாலின் கட்சியின் தலைவரானார். கடந்தாண்டு நடந்த தேர்தலில், உதய நிதி உள்ளிட்டவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது.

அதிமுகவில் இருந்து வெளியேறி திமுகவிற்கு வந்த 8 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

இந்த நிலையில், கட்சிக்காக உழைத்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிடவும், கட்சியில் பொறுப்பும் கிடைப்பதில்லை என்ற விமர்சனம் எழுந்து வரும் நிலையில், இன்று அக்கட்சியின் மூத்த தலைவரும் திமுக அமைப்புச் செயலாளருமான ஆர்.எஸ். பாரதி. எங்களுக்குப் பின்னால் வந்தவர்கள் எல்லாம் எம்.எல்.ஏ எம்பி ஆகிவிட்டனர். ஒரே கட்சி ஒரே கொடி என இருந்ததால் பதவி கிடைக்கவில்லை. உழைத்தவர்களுக்கு சீட் கிடைக்காமல், உழைக்காதவர்கள் பதவியில் வந்து உட்கார்ந்து உள்ளனர் என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இது திமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

சினோஜ்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்