திமுக பிரமுகர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: தொண்டர்கள் அதிர்ச்சி

Webdunia
செவ்வாய், 27 ஆகஸ்ட் 2019 (21:06 IST)
நாமக்கல் அருகே செங்கப்பள்ளி என்ற பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் மருத்துவர் ஆனந்த்  தனக்கு சொந்தமான தோட்டத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இவர் ஒரு கோடீஸ்வரர் என்பதால் பணப்பிரச்சனை இவரது தற்கொலைக்கு காரணமாக இருக்காது என்று கருதப்படுகிறது
 
 
டாக்டர் ஆனந்த் மனைவி கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். டாக்டர் ஆனந்த் மனைவி இன்று வெளியூர் சென்றிருந்த நிலையில் திடீரென துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன் இவர் கடிதம் எதுவும் எழுதி வைக்கவில்லை என்பதால் திடீரென தற்கொலை முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது
 
 
டாக்டர் ஆனந்த் என்ன காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார் என போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் டாக்டர் ஆனந்த் தற்கொலைக்கு முன் தனது கிளினிக்கில் பணியாற்றும் ஊழியர்களுக்கான ஆகஸ்ட் மாத ஊதியத்தை இன்றே ஆனந்த் வழங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்