நான் இறந்துவிட்டேன்.. என் தொகுதி காலியாகிவிட்டது: லால்குடி எம்.எல்.ஏ அதிர்ச்சி பதிவு..!

Mahendran
சனி, 15 ஜூன் 2024 (18:05 IST)
லால்குடி எம்எல்ஏ தனது சமூக வலைதளத்தில் நான் இறந்து விட்டேன் எனது தொகுதியை காலி ஆகிவிட்டது என்று ஆதங்கத்துடன் பதிவு செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதி எம்எல்ஏவாக சௌந்தர பாண்டியன் என்பவர் இருந்து வரும் நிலையில் அவருக்கு அரசு விழாக்களில் எந்த விதமான அழைப்பும் இல்லாமல் இருந்ததாகவும் அதனால் அவர் அரசு விழாவில் பங்கேற்காமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் புதிய பேருந்து நிலையம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் வளாகத்தில் கட்டப்படும் புதிய அலுவலகத்திற்கான கட்டிடங்களுக்கான இடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
 
இதில் கூட லால்குடி சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் சௌந்தர பாண்டியனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்றத் தொகுதி திமுக எம்எல்ஏவான சவுந்தரபாண்டியன் என்பவர் இயற்கை எய்துவிட்டதால் அந்த தொகுதி காலியான இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்ற பதிவு செய்துள்ளார்.
 
இந்த பதிவு திமுகவினர் மற்றும் அரசு அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்