ஆட்சிக் கலைப்பு வேண்டாம் – ஸ்டாலின் முடிவால் நிர்வாகிகள் அதிர்ச்சி !

Webdunia
வெள்ளி, 31 மே 2019 (11:31 IST)
எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியைக் கலைக்க எந்த முயற்சிகளும் செய்ய வேண்டாம் என திமுக முனைப்பில் இருந்த நிர்வாகிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஸ்டாலின் ஒரு முடிவை எடுத்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் இமாலய வெற்றி பெற்றுள்ளது திமுகவுக்கு இருக்கும் ஆதரவைக் காட்டியுள்ளது. அதேபோல இடைத்தேர்தலிலும் திமுக 13 தொகுதிகளை வென்றுள்ளது. இதனால் திமுக ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 109 ஆக உயர்ந்துள்ளது.

அதிமுகவுக்கு ஆதரவாக 123 எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனர். ஆனால் கலைச்செல்வன், ரத்தினசபாபதி உள்ளிட்ட மூவரும் அதிமுக எதிர்ப்பு மனநிலையில் தான் உள்ளனர்.. மேலும் கருணாஸும் அதிமுக வுக்கு எதிரான மனநிலையில்தான் இருக்கிறார். அதனால் மொத்தமாக 119 பேர்தான் அதிமுக எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை.

இதனால் இன்னும் சில எம்.எல்.ஏக்களை அதிமுகவில் இருந்து இழுக்க திமுக மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் ஈடுபட்டனர். ஆனால் ஸ்டாலின் அந்த வேலைகளை நிறுத்த சொல்லியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  ஸ்டாலினின் இந்த முடிவுக்குக் காரணமாக ‘எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு இப்போது மக்களிடம் கெட்டப் பெயரை வாங்கி வருகிறது. அதனால் இப்போது தேவையில்லாமல் ஆட்சியைக் கலைக்க வேண்டாம். இன்னும் இரண்டு ஆண்டுகள் அவர்கள் ஆட்சி செய்தால் மக்கள் நம்பிக்கை முழுவதையும் நாம் பெறலாம். அதனால் சட்டமன்றத் தேர்தலில் மிகபபெரிய வெற்றியைப் பெறலாம்’ எனக் கூறுகின்றனர் திமுகவினர். அதனால் எடப்பாடி ஆட்சிக்கு இப்போதைக்குப் பாதிப்பில்லை எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்