பைசாக்கு பிரயோஜனம் இல்ல... தெரிந்தும் ரிஸ்க் எடுக்கும் ஸ்டாலின்!

Webdunia
புதன், 3 ஜூலை 2019 (12:38 IST)
ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ-க்கல் மீது போடப்பட்டுள்ள வழக்கில் அழுத்தம் தருவதால் ஸ்டாலினுக்கு எந்த பயனும் இல்லை என தெரிகிறது. 
 
கடந்த 2017 ஆம் ஆண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டமன்றத்தில் நடந்தபோது ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். 
 
இதனால் அதிமுக கொறடாவின் உத்தரவை மீறி செயல்பட்ட 11 எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த 2 ஆண்டுகளாக முடிவுக்கு வராமல் அழைக்கழிக்கப்பட்டு வருகிறது. 
 
இந்நிலையில், தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைந்ததை அடுத்து அவர் தரப்பில் இந்த வாக்கை விசாரிக்கும் படி கோரிக்கை மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கி இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அப்படி இந்த வழக்கு விசாரணைக்கு வந்து ஓபிஎஸ்-க்கு எதிராக தீர்ப்பு வந்தாலும் இந்த தீர்பினால் திமுகவிற்கு எந்த லாபமும் இல்லை. ஆம், 11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும் ஆட்சிக்கு உடனே ஆபத்து இல்லை. 
 
தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்களின் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும். இடைத்தேர்தலில் திமுக பெருவாரியான தொகுதியை கைப்பற்றும் என்றாலும், இந்த வழக்கு முடிவடைந்து தேர்தல் கமிஷன் இடைத்தேர்தல் அறிவிப்பதற்குள் பொதுத்தேர்தலே வந்துவிடும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்