ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு வெளியாகி சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றனர். சசிகலா சிறைக்கு செல்லும் முன்னர் ஜெயலலிதா சமாதியில் மேற்கொண்ட 3 சபதத்தை அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது.
சூழ்ச்சி, துரோகம், இக்கட்டு ஆகிய மூன்றில் இருந்தும் மீண்டு வருவேன் என சபதம் எடுத்தார். மேலும், அதிமுகவை என்னிடம் இருந்து எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. நான் எங்கு இருந்தாலும் அதிமுக மீதான சிந்தனை எப்போதும் இருக்கும்.
நிலைமை இப்படியே போனால் டிடிவி தினகரன் உருவாக்கிய கட்சியில் அவர் மட்டுமே இருப்பார் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதோடு, தினகரனின் தன்னிச்சையான நடவடிக்கைகளால் கடைசி வரை சசிகலா மேற்கொண்ட சபதம் நிறைவேறாது எனவே தெரிவதாக பேச்சுக்கள் எழுந்துள்ளது.