முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி: திமுக அறிவிப்பு

Webdunia
திங்கள், 30 மார்ச் 2020 (11:00 IST)
தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து கொரோனா வைரஸ் தடுப்பு நிதியை மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு தாராளமாக வழங்க வேண்டும் என பிரதமர் மோடி அவர்களும், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் சமீபத்தில் வேண்டுகோள் விடுத்தனர் 
 
இதனை அடுத்து மத்திய அரசின் கொரோனா தடுப்பு நிதியாக டாடா நிறுவனம் 1500 கோடி வழங்கியது. அதேபோல் கோடாக் மஹிந்திரா வங்கி 50 கோடி ரூபாயும், அதானி குழுமம் 100 கோடி ரூபாயும், நடிகர் அக்ஷய்குமார் 25 கோடி ரூபாயும், என கோடிக்கணக்கில், லட்சக்கணக்கில் நிதிகள் குவிந்து வருகிறது 
 
அந்த வகையில் தமிழக முதல்வரின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கும் பொது நிவாரண நிதியில் லட்சக்கணக்கில் நிதி குவிந்து வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு திமுக சார்பில் ரூபாய் ஒரு கோடி நிதி வழங்கப்படும் என திமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான முக ஸ்டாலின் அவர்கள் சற்றுமுன் அறிவித்துள்ளார். இதனை அடுத்து வேறு சில கட்சிகளும் முதல்வரின் பொது நிவாரண நிதி வழங்கும் அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்