டாடாவை அடுத்து பெரிய தொகையாக நிதியுதவி செய்த நிறுவனம்!

ஞாயிறு, 29 மார்ச் 2020 (15:41 IST)
டாடாவை அடுத்து பெரிய தொகையாக நிதியுதவி செய்த நிறுவனம்!
இந்தியா முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரசிடமிரிடம் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக முதலில் 500 கோடி நிதி உதவி என அறிவித்த டாடா நிறுவனம், அதன் பின்னர் பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்கி மேலும் ஆயிரம் கோடி என மொத்தம் ஆயிரத்து 500 கோடி நிதியுதவி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தனி ஒரு நிறுவனம் ஒன்று இவ்வளவு பெரிய தொகையை கொடுத்து உள்ளது அனைவரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது
 
இந்த நிலையில் டாடாவை அடுத்து ரூபாய் 50 கோடி நிதியாக கோடக் மகேந்திரா வங்கி நிதியுதவி செய்துள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக கோடக் மகேந்திரா வங்கி மற்றும் அதன் தலைமை நிர்வாக இயக்குனர் சார்பில் ரூபாய் 50 கோடி நிதி உதவி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
ஏற்கனவே அக்ஷய்குமார் 25 கோடி, பிசிசிஐ 55 கோடி என கோடிக்கணக்கில் நிதி குவிந்து வருவதால் கொரோனாவுக்கு எதிரான போரில் மத்திய அரசு மக்களை காப்பாற்றும் நடவடிக்கையில் நம்பிக்கையுடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்