திமுக சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், நெடுஞ்சாலை துறை ஊழல் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.
திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உயர்நீதிமன்றத்தில் ஊழல் வழக்கில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள சில முக்கிய குறிப்புகள் பின்வருமாறு, நெடுஞ்சாலைத்துறையில் ரூ.3120 கோடி ஊழல் நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக முதல்வர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தும் வழக்குப் பதிவு செய்யவில்லை.
எனவே, முதல்வருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய ஹைகோர்ட் தலையிட்டு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அதேபோல், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதேபோல், இப்போது முதல்வர் தொடர்பாகவும், திமுக வழக்கு தொடர்ந்துள்ளது.