அமைச்சரின் வருகையின் போது GOBACK சொன்ன திமுக நிர்வாகிகள்.. திமுக தலைமை நடவடிக்கை..!

Mahendran

திங்கள், 19 மே 2025 (10:52 IST)
அமைச்சரின் வருகையின் போது "கோ பேக்" என்று கூறிய திமுக நிர்வாகிகளை கட்சியிலிருந்து நீக்கியுள்ளதாக, பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளதால், தர்மபுரி மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
தர்மபுரி  கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பென்னாகரம் தொகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு திமுகவில் வாய்ப்பு அளிக்காமல், மேற்கு மாவட்ட துணை பொதுச்செயலாளர் எஸ்.பி.மணி தர்மபுரி மாவட்டத்தில் நியமனம் செய்ததாக, அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
 
இந்த நியமனத்தால் அதிருப்தியடைந்த கிழக்கு மாவட்ட செயலாளர் மற்றும் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள், சமூக வலைதளத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்திற்கு எதிராக "கோ பேக்" என பதிவு செய்தனர்.
 
இதனால் அதிர்ச்சியடைந்த கட்சி மேலிடம், சம்பந்தப்பட்ட நான்கு நிர்வாகிகளை கட்சியிலிருந்து நீக்கியுள்ளது. இதுவும் திமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களில் ஒருவரான வைத்திலிங்கம் இதுகுறித்து கூறியபோது, “நான்  கடந்த 40 ஆண்டுகளாக கட்சியில் இருக்கிறேன். 1984ஆம் ஆண்டு முதல் தீவிர உறுப்பினராக செயல்பட்டு வருகிறேன். எங்கள் நீக்கத்திற்கு காரணம் எம்.பி. மணி மற்றும் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தான். அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, எங்களைமேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,” என்று அதிருப்தியுடன் தெரிவித்தார்.
 
இதனால், தர்மபுரி மாவட்ட திமுகவில் பரபரப்பு நிலவுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்