ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு பின்னர், பாகிஸ்தானுக்கு ஆதரவளிப்பதாக துருக்கி நேரடியாக தெரிவித்ததை அடுத்து, இந்தியா-துருக்கி இடையிலான வணிக தொடர்பு குறைந்து வருகிறது.
ஏற்கனவே, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் துருக்கியுடன் இருந்த ஒப்பந்தத்தை ரத்து செய்த நிலையில், தற்போது மும்பை ஐஐடியும் அதே போன்ற ஒரு நடவடிக்கை எடுத்துள்ளது.
"தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் இந்திய அரசின் நடவடிக்கைகள் காரணமாக, மறு அறிவிப்பு வரும் வரை துருக்கி பல்கலைக்கழகங்களுடனான ஒப்பந்தங்களை நிறுத்தி வைக்கிறோம்," என்று மும்பை ஐஐடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.