இந்தியாவில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்று வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஒரு கிராம் தங்கம் கிட்டத்தட்ட ₹10,000-ஐ நெருங்கியுள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
இன்றைய விலை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ₹9,725-ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ₹10,587ஆக உயர்ந்துள்ளது.
சவரன் விலை: அதேபோல், ஒரு சவரன் (8 கிராம்) தங்கம் நேற்று இருந்த விலையில் இருந்து ₹160 உயர்ந்து, ₹77,800-க்கு விற்பனையாகிறது.
8 கிராம் 24 கேரட் தங்கம் ₹84,696க்கு விற்பனையாகிறது.
இன்று சென்னையில் வெள்ளி ஒரு கிலோ ₹136,000.00 என விற்பனையாகிறது.
சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார ஸ்திரமின்மை, மத்திய வங்கிகளின் தங்கம் வாங்கும் அதிகரித்த போக்கு, மற்றும் பாதுகாப்பான முதலீட்டின் மீதான முதலீட்டாளர்களின் ஆர்வம் ஆகியவை தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாக உள்ளன.
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது, நகை பிரியர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரை கவலையடைய செய்துள்ளது. அதே சமயம், தங்கத்தில் முதலீடு செய்துள்ளவர்களுக்கு இது ஒரு சாதகமான சூழ்நிலையாக உள்ளது. இந்த விலை உயர்வு இன்னும் அதிகரிக்கும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.