ஆப்கானிஸ்தானை உலுக்கிய நிலநடுக்கம்! 800 பேர் பலி! - ஓடிச்சென்று உதவிய இந்தியா!

Prasanth K

செவ்வாய், 2 செப்டம்பர் 2025 (10:51 IST)

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கங்களால் ஏராளமான மக்கள் பலியாகியுள்ள நிலையில் முதல் ஆளாக உதவிகளை அறிவித்துள்ளது இந்தியா.

 

ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லை அருகே அமைந்துள்ள ஜலாலாபாத் நகரத்தில் நேற்று இரவு 11.47 மணியளவில் 6.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உண்டானது. இதில் பல கட்டிடங்கள் இடித்து விழுந்த நிலையில் மக்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு சாலைகளில் ஓடினர். தொடர்ந்து 20 நிமிடம் கழித்து மீண்டும் அடுத்தடுத்து அப்பகுதியில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டது.

 

இந்த பயங்கர நிலநடுக்கத்தால் இதுவரை சுமார் 800 பேர் உயிரிழந்துள்ள நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் காணாமல் போனதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் பல கிராமங்கள் நிலச்சரிவால் முழுவதும் அழிந்து விட்டதாகவும், அங்கு வாழ்ந்த மக்கள் என்னவானார்கள் என்று தெரியவில்லை என்றும் செய்திகள் வெளியாகிறது. இந்நிலையில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானுக்கு நிவாரண உதவிகள், மருத்துவ உதவிகள், உணவு, குடிநீர் உள்ளிட்ட உதவிகளை வழங்குவதாக இந்தியா அறிவித்துள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்