திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவாக இருப்பதால் அவரை பார்வையாளர்கள் யாரும் சந்திக்க வர வேண்டாம் என திமுக சார்பில் கூறப்பட்டது. அவருக்கு என்ன உடல் நலக்குறைவு என்பதையும் கூறியிருந்தது திமுக வெளியிட்ட செய்தி குறிப்பு.
அந்த செய்தி குறிப்பில், தலைவர் கலைஞர் அவர்களுக்கு கடந்த சில நாட்களாக, வழக்கமாக அவர் உட்கொண்டு வரும் மருந்துகளில் ஒன்று ஒத்துக் கொள்ளாத நிலையில் ஒவ்வாமை ஏற்பட்டு, அதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஓய்வெடுத்து வருகிறார்கள்.
மருத்துவர்கள் மேலும் சில நாட்கள் தலைவர் கலைஞர் அவர்களை ஓய்வெடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்கள். எனவே பார்வையாளர்கள் தலைவர் கலைஞர் அவர்களைக் காண வருவதைத் தவிர்த்து, ஒத்துழைப்பு நல்க வேண்டுமென்று கூறப்பட்டது.
அவரை யாரும் சந்திக்க வர வேண்டாம் என கூறும் அளவுக்கு என்ன பிரச்சனை என்பதை திமுக வட்டாரத்தில் விசாரித்ததில், அவருக்கு உடலில் கொப்புளங்கள் ஏற்பட்டுள்ளதால் அவரால் சட்டை போட முடியவில்லையாம். கைகளிலும் கொப்புளங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும் கை, கால்களில் லேசான வீக்கம் உள்ளது. எனவே தான் அவரை யாரும் பார்க்க வர வேண்டாம் என அறிவுத்தப்பட்டுள்ளது என கூறுகிறார்கள்.