அமமுக நிர்வாகி மீது திமுகவினர் தாக்குதல்- டிடிவி. தினகரன் டுவீட்

Webdunia
வெள்ளி, 20 அக்டோபர் 2023 (14:41 IST)
தேனி வடக்கு மாவட்ட இதயதெய்வம் அம்மா தொழிற்சங்கப் பேரவையின் இணைச் செயலாளர் திரு.சுரேஷ்குமார் அவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய திமுகவினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையைக் கேட்டுக் கொள்கிறேன் என்று அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் சமூகவலைதள பக்கத்தில், 

''தேனி கான்வெண்ட் அருகே நேற்று இரவு தனியார் உணவகத்தில் வாகனத்தை நிறுத்திச் சென்ற திரு.சுரேஷ்குமார் அவர்களை திமுகவைச் சேர்ந்த சிலர் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கியதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். திரு.சுரேஷ்குமார் அவர்களைத் தாக்கிய திமுகவினர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, ஆளுங்கட்சி என்ற அராஜகப் போக்கில் செயல்படும் திமுகவினரை இதுபோன்ற செயல்களில் ஈடுபடாத வகையில் எச்சரிக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்