கலைஞர் நினைவிட திறப்புவிழாவில் கலந்து கொள்ளாத காங்கிரஸார்.. முறிகிறதா கூட்டணி?

Mahendran
செவ்வாய், 27 பிப்ரவரி 2024 (11:34 IST)
நேற்று நடந்த புனரமைக்கப்பட்ட கலைஞர் நினைவிட திறப்பு விழாவில் திருமாவளவன், கி வீரமணி உள்ளிட்ட கட்சியின் தலைவர்கள் கலந்து கொண்ட நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒருவர் கூட கலந்து கொள்ளாமல் இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காங்கிரஸ் மற்றும் திமுக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருவதாக கூறப்பட்டாலும் இரு தரப்பின் இடையே இன்னும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.

காங்கிரஸ் கட்சி எட்டு தொகுதிகள் வரை கேட்பதாகவும் ஆனால் திமுக 5 தொகுதிகளுக்கு மேல் தர முடியாது என்று கூறுவதாகவும் இதனால் கூட்டணியில் இருந்து விலக காங்கிரஸ் ஆலோசனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது

திமுக கூட்டணியில் இருந்து விலகி வந்தால் 12 தொகுதிகள் தருவதாக எடப்பாடி பழனிச்சாமி கூறி இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருப்பதை அடுத்து அதிமுக கூட்டணிக்கு செல்லலாமா என்ற ஆலோசனையும் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று நடந்த கலைஞர் நினைவிட திறப்பு விழாவில் 8 காங்கிரஸ் எம்பிக்கள் கலந்து கொள்ள இருப்பதாக இருந்த நிலையில் திடீரென டெல்லியில் இருந்து கலைஞர் நினைவிட திறப்பு விழாவுக்கு செல்ல வேண்டாம் என்று உத்தரவு வந்ததாகவும் இதனை அடுத்து காங்கிரஸ் எம்பிக்கள் செல்லவில்லை என்றும் கூறப்படுகிறது

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்